யாழில் நிறுத்தப்படவுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருட்கள்- வெளியானது அறிவிப்பு!

sri lanka jaffna bakery press meet association
By Kalaimathy Mar 05, 2022 08:33 AM GMT
Report

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.   

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 

பிறீமா விற்பனை முகவர்கள் யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். எனினும் எதிர்வரும் காலங்களில் மேலும் குறைக்கப்படலாம் என முகவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம்.  தற்போதுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தியை குறைக்க உள்ளோம் எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு தெரிவிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.     

மாவட்ட அரசாங்க அதிபர் பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம். ஏனைய மாவட்டங்களுக்கு  வழங்கப்படுவது போன்று பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு மா விநியோகிக்கப்படுமாக இருந்தால் வழமைபோல் உற்பத்திப் பொருட்களை மேற்கொள்ள முடியும். 

மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது.  எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

எனவே வெதுப்பகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடர் நிலையிலும் பேக்கரி உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில்,  தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபர் உடனடியாக நமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளோம்.

யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கான உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022