இதுவரை காலமும் இல்லாத அளவு மாபெரும் எழுச்சி - தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி!

Jaffna Sri Lanka
By Kalaimathy Sep 26, 2022 05:10 AM GMT
Report

தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் இன்றாகும்.

அந்த வகையில் இன்றைய நினைவேந்தல் நிகழ்வு இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சியாக இடம்பெறவுள்ளதாக தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனைவரும் இன்று காலை10 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலயத்திற்கு வருகை தந்து அஞ்சலிகளையும், வணக்கங்களையும் செலுத்துமாறு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பில் தவத்திரு. வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இன்று காலை 8 மணிக்கு தியாகதீபம் திலீபன் பிறந்த இல்லமான ஊரெழுவிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பித்து நல்லூரை வந்தடைய உள்ளது.

நினைவாலயத்தில் அஞ்சலி

இதுவரை காலமும் இல்லாத அளவு மாபெரும் எழுச்சி - தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி! | Sri Lanka Jaffna Nallur Thileepan Memorial 2022 26

இவ்வாறான நிலையில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள யாழ்.பருத்தித்துறை வீதி மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக முற்பகல்10.48 மணியளவில் தியாகதீபம் திலீபனின் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த இடத்தில் நினைவேந்தல் பொதுச் சுடரேற்றல், அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலர்கள் செலுத்துதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

எனவே, அனைத்துத் தமிழ் உறவுகளும் தவறாது வருகை தந்து அஞ்சலி செலுத்தி ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் திலீபன் நினைவேந்தலைப் பெரு எழுச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

மதியம் 12 மணிவரை இடம்பெறவுள்ள அஞ்சலி

இதுவரை காலமும் இல்லாத அளவு மாபெரும் எழுச்சி - தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி! | Sri Lanka Jaffna Nallur Thileepan Memorial 2022 26

இதுவரை காலமும் இல்லாத அளவு மாபெரும் எழுச்சி - தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி! | Sri Lanka Jaffna Nallur Thileepan Memorial 2022 26

இன்று காலையிலிருந்து நண்பகல்12 மணி வரை யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் அனைவரும் நினைவாலயத்திற்கு வருகை தந்து கலந்து கொள்வதற்கு வணிகர் கழகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

யாழ்.மாவட்டத்தின் எந்தப் பகுதிகளிலிருந்தும் தமிழ் உறவுகள் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்டத் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினரிடமும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

அத்துடன் தியாகதீபம் திலீபன் நினைவேந்தலின் இறுதிநாளில் உங்களுடைய பேருந்துகளிலும், வாகனங்களிலும் தியாகதீபம் திலீபனின் எழுச்சிப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும்.

அவ்வாறு ஒலிபரப்பும் போது எங்கள் மக்கள் அனைவரும் தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பின் மகத்துவத்தையும், அந்த நோக்கத்தையும் உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026