லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
செப்டம்பரில் 6.5 பில்லியன் செலுத்தியதாகவும் அக்டோபரில் 7.5 பில்லியன் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விலை குறைக்கப்பட்ட லிட்ரோ
லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி குறைத்திருந்தது.
அதற்கமைய தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ரூ. 4280, 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 1720, மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 800 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.