அலரி மாளிகைக்கு அருகில் பதற்றம்- முக்கிய அமைச்சரின் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்கள் !
இரண்டாம் இணைப்பு
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் மாத்தறை இல்லத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று தென்னிலங்கை முழுவதும் பெரும் கலவரம் இடம்பெற்றதையடுத்து அடிதடி, அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பன இடம்பெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டதையடுத்து காவல்துறையினர் கண்ணீப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை மெதமுலன ராஜபக்ச நூதனசாலை மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
