354 பாடசாலைகளை மேம்படுத்த அரசு முடிவு
தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக கம்பனி நிர்வாகத்தின் கீழியங்கும் தோட்டக் காணிகளை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07 மாவட்டங்களில் காணப்படும் 354 தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக இப் பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்திலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் குறைந்த பயன்பாட்டைக் கொண்ட காணிகளில் 02 ஏக்கர் காணியை ஒதுக்கி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இப்பாடசாலைகளுக்கு அப்பால் மேலும் 491 பாடசாலைகள் காணப்படுவதுடன், இப் பாடசாலைகளின் தேவைகளுக்கமைய 02 ஏக்கர் உயர்ந்தபட்ச காணி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, இப் பாடசாலைகளுக்கு தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் காணிகளை ஒதுக்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.