மகிந்தவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்!
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் கொழும்பு திம்பிரிகஸ்யாயவுக்கு அருகில் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து,பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு முன்பாகவும், கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள ‘மைனா கோ கம’ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய இரண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்ட தளங்களையும் அழித்திருந்தனர்.
இச்சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாகநடைமுறைக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போதே தாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்காக பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பலர் கோபமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
