பொதுஜன பெரமுனவிற்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்கள்- எதிர்க்கட்சியில் அமரும் தீர்மானம்!
சிறிலங்கா நாடாளுமன்றில் பொதுஜன பெரமுனவை பிரதிநித்ததுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத்தீர்மானித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையிலேயே, அவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள தீர்மானித்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆளும்கட்சியான பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியில் அமரும் தீர்மானம்
இவர்களில் ஒருவர், மாவட்ட தலைவராகவும் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு உறுப்பினர்களும் முன்வைத்த பரிசீலனைகளை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுயாதீனமாக இயங்கும் உறுப்பினர்கள்
இவ்வாறான நிலையில் இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்து, செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
