பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி
காவல்துறை ஊடகபேச்சாளர் பதவியில் இருந்து எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க விலகியாத வெளியான செய்திகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதன்படி, செய்திகளில் கூறப்பட்டது போல் தான் பதவி விலகவில்லை என்றும் இடமாற்றம் மட்டுமே கோரியுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காவல்துறை அதிகாரி ஒருவருக்கு பொறுப்பொன்று வழங்கப்பட்ட பிறகு அதில் இருந்து அவருக்கு விலக முடியாது என்றும் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் பதவியில்
இந்த நிலையில், தனது தனிப்ப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியதாக தெரிவித்த அவர், தான் இருக்கும் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவியில் கடமையாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, தான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவதாக எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மேலும் கூறியள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்