அதிபரும் அரசாங்கமும் கூட்டு - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் சுட்டிக்காட்டு

By Pavan Jan 19, 2023 11:01 AM GMT
Report

தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும்,தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது மக்களின் தேர்தல் உரிமையை மீறுவதாகவும்,அவர்களுக்கு மக்களிடமுள்ள குறைந்த விருப்பை தவிர்க்கவும் பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுவதாகவும், இந்நேரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் அதிபர் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் கூட ஒத்திவைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலுக்கு பணமில்லை

அதிபரும் அரசாங்கமும் கூட்டு - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் சுட்டிக்காட்டு | Sri Lanka Political Crisis

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவைக் கொண்டு வருதல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் தவறானது எனவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாகவும் கூறுவது,ஒரு கட்சியின் தலைவராகவும்,உறுப்பினராகவும் இருந்து கொண்டு அதிபர் மற்றும் பிரதமர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆவணங்களை பரிசீலிப்பது போன்ற சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் செயல்முறையை பாதிக்கும் விடயங்கள்,தேர்தலுக்கு பணமில்லை எனக் கூறுவது,பணத்தை அச்சடிக்க முடியாது என்ற நிபந்தனை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதான நடவடிக்கைகள் இதையே புலப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என கூறிக்கொண்டே இரண்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாகவும்,அமைச்சர்களை பராமரிக்க பெரும் தொகையை செலவு செய்யும் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

பல குறைபாடுகள் 

அதிபரும் அரசாங்கமும் கூட்டு - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் சுட்டிக்காட்டு | Sri Lanka Political Crisis

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு எதிர்கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும்,அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் கொள்கையளவில் இது ஒரு நல்ல விடயமாக கருதுவதாகவும், ஆனாலும் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் குறித்து பல சிக்கல்கள் நிலவுவதாகவும், இந்த சட்டமூலத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைப்பதற்காகவே நேற்று அதிபர் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இது பொருந்தாது என ஷரத்து சேர்க்கப்பட்டால் இச்சிக்கல் அவசியமில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் இன்றைய(19) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்