கொல்கத்தாவில் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
India
Mamata Banerjee
By Dilakshan
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பானது டுபாய் விமான நிலையத்தில் நேற்று(13) இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இனால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓய்வறையில் நடைபெற்ற சந்திப்பின் போது, மேற்கு வங்கத்தில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்குமாறு ரணில் விக்ரமசிங்கவை மம்தா பானர்ஜி அழைத்துள்ளார்.
தொழில் முனைவோர் மாநாடு
அத்தோடு தொழில் முனைவோர் மாநாடானது நவம்பர் 21,22 ஆகிய திகதிகளில் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.

இதனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, 12 நாள் பயணமாக டுபாய் மற்றும் ஸ்பெயினுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்