இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Tourism Economy of Sri Lanka Dollars
By Sathangani Dec 09, 2024 11:23 AM GMT
Report

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலா வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக பதிவான நிலையில் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 56% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் (CBSL) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,804,873 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை நெருங்கி வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் பதிவான பல கொள்ளை சம்பவங்கள்: காவல்துறை வலையில் சிக்கிய திருடன்

யாழில் பதிவான பல கொள்ளை சம்பவங்கள்: காவல்துறை வலையில் சிக்கிய திருடன்

சுற்றுலாப் பயணிகளின் வருகை

நவம்பர் 01ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்கு இடையில் நாட்டிற்கு 184,158 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் பாரிய அதிகரிப்பு | Sri Lanka S Tourism Revenue Up By 56 Percent 2024

கடந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அதிகபட்சமாக 42,376 சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 41,120 ஆக பதிவாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ரஷ்யா (Russia) இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருந்து (Russia) 29,053 பேர் வருகை தந்துள்ளனர்.

நாட்டின் மின் கட்டணத் திருத்தம் - தொடரும் இழுபறி

நாட்டின் மின் கட்டணத் திருத்தம் - தொடரும் இழுபறி

இலங்கை மத்திய வங்கி

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார குறிகாட்டி அறிக்கையின் படி கடந்த ஆண்டு நவம்பர் மாத சுற்றுலா வருமானமான 205.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த நவம்பரில் 272.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் பாரிய அதிகரிப்பு | Sri Lanka S Tourism Revenue Up By 56 Percent 2024

ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலா வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இது கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையேயான 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 56% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு நவம்பரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வைப்புச் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பணம் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன் இது ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 517.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

நாட்டின் மின் கட்டணத் திருத்தம் - தொடரும் இழுபறி

நாட்டின் மின் கட்டணத் திருத்தம் - தொடரும் இழுபறி

வெளிநாட்டு பணவலுப்பல்கள் 

ஓகஸ்ட் 2024 இல் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் பணம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் பாரிய அதிகரிப்பு | Sri Lanka S Tourism Revenue Up By 56 Percent 2024

2023 இல், தொழிலாளர்கள் அனுப்பிய பணம் ஜனவரி முதல் நவம்பர் வரை 5.39 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன் 2024 ஜனவரி முதல் நவம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பணம் 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்களின் மொத்த வரவு, ஆண்டுக்கு ஆண்டு 10.4% வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016