இலங்கை முழுவதும் குவிக்கப்படவுள்ள இராணுவம் - சவேந்திர சில்வா தகவல்!
srilanka
sinhala and tamil new
By Vasanth
தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புத்தாண்டின் போது பயணக் கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படவில்லை எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் போன்றே புத்தாண்டின் போதும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக பாகாப்பு பிரிவினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல விரிவான செய்திகளுடன் மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்