உலக முடிவை பார்வையிடச் சென்று மாயமான தென்னிலங்கை ஊடகத்தின் பணியாளர்! தற்போது வெளியாகியுள்ள தகவல்
ஸ்ரீலங்காவின் உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமற்போன தினுர விஜேசுந்தரவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 2 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இத தொடர்பில் மேலும் தெரியவருகையில், மடுல்சீமையிலுள்ள உலக முடிவை கடந்த வாரம் பார்வையிடச் சென்ற நிலையில், சிரச தொலைக்காட்சியின் 3D அனிமேஷன் தயாரிப்பாளரான தினுர விஜேசுந்தர காணாமற்போயிருந்தார். இந்நிலையில் உலக முடிவின் பள்ளத்தில் தொடர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
காணாமற்போன நபரைத் தேடும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் விசேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு வைத்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் கடந்த 6 ஆம் திகதி உலக முடிவை பார்வையிடச் சென்றிருந்த போதே தினுர விஜேசுந்தர காணாமல் போயிருந்தார்.
அவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கற்பாறைக்குள் சிக்குண்டிருந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.