வன்முறையைத் தூண்டிய மகிந்தவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
வன்முறையாளர்களை கொழும்புக்கு கொண்டு வந்த குற்றத்தின் பேரில் மஹிந்தவை கைது செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்றைய தினம் அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களை கூட்டி கலந்துரையாடல் ஒன்று நடத்தினார். இந்த கலந்துரையாடலில் பங்குகொண்டதன் பின்னர் மகிந்த ஆதரவாளர்கள் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இதன் காரணமாக காலி முகத்திடல் பெரும் கலவர பூமியானது. இந்த கலவரத்தை அடக்குவதற்கு கலகமடக்கும் காவல்துறையினர் களமிறக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் மகிந்த ஆதரவாளர்கள் தடைகளை உடைத்து போராட்டக்களத்திற்குள் நுழைந்து கொட்டகைகளை அடித்து நொருக்கி தீயிட்டனர்.
இதன் காரணமாக பெருமளவில் வன்முறை வெடித்தது. அதனையடுத்து பெருமளவு படையினர் காலி முகத்திடலில் குவிக்கப்பட்டனர்.
ஆகவே இவ்வாறான வன்முறைக்கு மகிந்தவே காரணம் எனத் தெரிவித்தே அவரை கைது செய்ய வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
