கொழும்பு வன்முறை- திருகோணமலையிலும் போராட்டம்!
Galle Face Protest
Trincomalee
Sri Lanka
SL Protest
By Kalaimathy
கொழும்பில் அலரி மாளிகை மைனா கோ கம மற்றும் காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம என்பன மகிந்த ஆதரவாளர்களால் இன்று சேதமாக்கப்பட்டது.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து திருகோணமலை நகரிலும் பொது மக்களால் இன்று மாலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் திருகோணமலை அலஸ் தோட்ட வீதி, கந்தளாய் உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதன் போது அரசாங்கத்துக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியதுடன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை கோரியும் மக்களால் போராட்டம் இடம்பெற்றது.
எப்படி இருந்த போதிலும் கொழும்பில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன் பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தையும் அரச தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்