இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணா்கள் விடுத்துள்ள அழைப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
நிபுணர்களின் கருத்து
“இந் நடவடிக்கையின் போது சித்திரவதைகள் மற்றும் தவறான சிகிச்சைகள் பதிவாகியுள்ளன. போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையின் தற்போதைய சூழல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களும் மனித உரிமைகளுக்கு உரித்தானவர்கள், அவர்கள் மேலும் பாகுபாடு மற்றும் களங்கத்தை எதிர்கொள்ளாமல் கண்ணியத்துடன் வாழ தகுதியானவர்கள்.
மறுவாழ்வு மையங்கள்
கட்டாய மறுவாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, அவை, தன்னார்வ, சான்றுகள் அடிப்படையிலான, சமூக சேவைகள் மையங்களாக மாற்றப்பட வேண்டும்.
இதேவேளை மக்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பும் நீதித்துறை செயற்பாட்டில் உள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |