நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
                                    
                    Kandy
                
                                                
                    Cricket
                
                                                
                    Sri Lanka Cricket
                
                                                
                    Afghanistan
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதனையடுத்து குறித்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டி இன்று (11) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        