தோல்வியை ஒப்புக்கொண்ட கோட்டாபய -பாராட்டிய ரணில்
gotabaya
Praise
Ranil Wickramasinghe
By Sumithiran
20 வது திருத்த சட்டம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி கோட்டாபய (gotabaya)ஒப்புக் கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
இன்று (ஒக்டோபர் 10) அவர் வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்போது செய்ய வேண்டியது 20 வது திருத்தத்தை ஒழித்து 19 வது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை நகர்த்துவது என்று முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
20 வது திருத்தத்தை தோல்வியாக அறிவித்ததற்காக ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க பாராட்டினார்.