நோர்வே சென்ற இலங்கை மல்யுத்த அணியின் பொறுப்பாளர் திடீர் மாயம்!
போட்டி ஒன்றுக்காக சென்றிருந்த இலங்கை மல்யுத்த அணியின் பொறுப்பாளர் நோர்வேயில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வேயின் ஒஸ்லோவில் இந்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை 72 உலக நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டிக்கு, ஆறு பேர் கொண்ட இலங்கை அணி சென்றிருந்தது.
எனினும் அணியின் பொறுப்பாளர் டொனால்ட் இந்திரவன்ச (Donald Indrawansa) அணியை விட்டு வெளியேறினார் என இலங்கை மல்யுத்த சங்கத்தின் (SLWA) தலைவர் சரத் ஹேவவிதாரன (Sarath Hewawitharana) கூறினார்.
இதேவேளை, இலங்கையிலிருந்து சென்ற மல்யுத்த குழு போட்டியாளர்கள் பொறுப்பாளர் இல்லாமல் நேற்று நாடு திரும்பியுள்ளனர்..
பொறுப்பாளரிடம் பணம் இருந்தபோதிலும் தங்களிடம் பிசிஆர் சோதனைகளுக்கு பணம் இல்லை என்று இலங்கை வீரர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்த நிலையில், அணியின் பொறுப்பாளர் டொனால்ட் இந்திரவன்ஸ (Donald Indrawansa), மீண்டும் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர், சரத் ஹேவவிதாரன (Sarath Hewawitharana) தெரிவித்துள்ளார்.