மிரட்டி கப்பம் பெற முயன்ற ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைது
arrested
money
army
court
By Jaso
நாட்டின் இருவேறு இடங்களில் மக்களை மிரட்டி கப்பம் பெற முயற்சித்த மூன்று ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் - நீர்கொழும்பு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பகுதியில் நேற்று இரவு பெண்ணொருவரை மிரட்டி 15 ஆயிரம் ரூபா கப்பம் பெற முயற்சித்த வேளை இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சீதுவை பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபா கப்பம் பெற முயற்சித்த வேளை சீருடையுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்