புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர
கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு (Cardinal Robert Francis Prevost) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றினை வெளியிட்டு இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
அந்தப் பதிவில், "கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
வெளியிட்ட பதிவு
உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
Congratulations to His Holiness Pope Leo XIV on your election as the new leader of the Catholic Church. Your role carries great responsibility and I wish you strength and wisdom as you guide the faithful. May your leadership bring hope and inspiration to people around the world.…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 9, 2025
உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
267 ஆவது பாப்பரசராக 69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அத்துடன் அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
