உக்ரைன் இராணுவத்தில் இணையவிருக்கும் இலங்கை படையினர்
இராணுவத்தில் இருந்து சட்டபூர்வமாக வெளியேற்றப்பட்ட சுமார் 70 இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உக்ரேனிய வெளிநாட்டு படையணி எனப்படும் உக்ரேனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படையில் சேர விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் போர்க்களத்தில் உயிரிழந்த முன்னாள் இலங்கை இராணுவ அதிகாரி ரனிஷ் ஹெவாஜின் சிறப்புப் பிரிவில் இணைந்து கொள்வதற்காக இந்த முன்னாள் இலங்கை அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் ஏற்கனவே பிறநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அதிகாரிகள் அஜர்பைஜான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று போலந்து வழியாக உக்ரைன் செல்ல தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை இராணுவம்
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் முப்படைகளில் இருந்து சுமார் 30,000 பேர் வெளியேறியுள்ளதாக பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 16.5 பில்லியன் ரூபாய்க்கான செலவுத்திட்ட மதிப்பீட்டை குறித்த குழு நேற்று (08.12.2023) பரிசீலித்தபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |