ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்க இலங்கைத் தமிழரின் ஆலோசனை
ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து பிணைக்கைதிகளாக இருந்த அமெரிக்கா பெண்கள் இருவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழர் ஒருவர் மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக தொடரும் இஸ்ரேல் தாக்குதலில் 200 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களில் Judith (59) மற்றும் அவரது மகளான Natalie Raanan (17) என்ற அமெரிக்கர்கள் இருவரும் அடங்குவர்.
தனஞ்செயன் ஸ்ரீஸ்கந்தராஜா
இவர்கள் கட்டார் நாட்டின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு பிறந்தவரான தனஞ்செயன் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் ''போர்ச்சூழலின் தீவிரத்தைக் குறைப்பதே, ஹமாஸ் பிடியில் மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க சிறந்த வழி'' என தெரிவித்துள்ளார்.
#Newsnight #Gaza_under_attack
— ian walker (@saucepieces) October 17, 2023
CEO of Oxfam GB explains world leaders need to be honest, only a ceasefire will halt civilian casualties in #Gaza
A #humanitarian corridor alone cannot in a small densely populated area like Gaza provide a sufficient solution to end the carnage. pic.twitter.com/51gamG7a2q
இவர் Oxfam என்னும் பிரித்தானிய தொண்டு நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் ஆவார். மேலும் இவர் சிறு வயதிலேயே ஆஸ்திரேலியாவிட்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை
மோதல் சூழல்
''இப்போதைய சூழலில், மோதல் மேலும் அதிகரிப்பது நல்லதல்ல,சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மோதல் சுழலின் தீவிரத்தைக் குறைக்கத் துவங்குவதே, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் காப்பாற்ற உதவும்.
தங்கள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 30 பேர் காசாவில் மீட்புப் பணிக்காக சென்றுள்ளனர். ஆனால், மக்களுக்கு உதவுவதற்காக சென்றுள்ள அவர்களே, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடவேண்டிய ஒரு சூழல் அங்கு நிலவுகிறது'' எனவும் தெரிவித்துள்ளார்.