உலகை உலுக்கிய இலங்கையரின் மரணம்!!! கண்ணீருடன் மனைவி கூறிய தகவல்
தனது கணவரின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தருமாறு பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா அரச தலைவர்களிடம் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது கணவர் கொலை செய்யப்பட்டதை ஊடகங்கள் ஊடாகவே அறிந்ததாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் நீதியை பெற்றுத்தருமாறும் அவர் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அமைச்சர்களான நாமல் ராஜபக்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கனேமுல்லவிலுள்ள பிரியந்த குமாரவின் வீட்டிற்கு இன்று சென்றுள்ளனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலத்தை சிறிலங்காவிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை மறுதினம் (06) அவரது சடலம் சிறிலங்கன் விமான சேவை ஊடாக நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இதற்கான செலவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.