மற்றுமொரு கர்ப்பிணிப்பெண்ணை பலியெடுத்தது கொரோனா
srilanka covid pregnant death
By Jaso
இலங்கையில் இன்றையதினமும் கொரோனா தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
அம்பாந்தோட்டை தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரே உயிரிழந்தவராவார்.
தெபரவெவ சுகாதார பரிசோதகரான எம்.கே.பண்டார இதனை உறுதிசெய்தார்.
கடந்த ஏப்ரல் 29ம் திகதி மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறித்த கர்ப்பிணித் தாய் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் குறித்த நிகழ்வில் பங்குபற்றிய 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த மே 5ம் திகதி குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் மாலபே நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்