உடன் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு பிரதேசங்கள் “லொக்டவுண்”
srilanka
lockdown
saventhirasilva
By Vasanth
அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மேலும் இரண்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி குருநாகல் மாவட்டம் கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு பகுதிகள் இன்று பகலில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, கண்டி மாவட்டம் பூஜாப்பிட்டிய – கொஸ்கொட பிரதேசமும் இன்று பகல் முதல் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி