வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு செய்யும் கபடத்தனம் இது தான்! எதிர்க்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள பெறுமதிவாய்ந்த நிலங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களிற்கு விற்பனை செய்கின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலாவத்துவாலா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்துவருவதுடன் மக்களை ஏமாற்றிவருகின்றது.
டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள பெறுமதியான நிலத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வாகனதரிப்பிடத்தை கட்டுவதற்காக அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது.
முன்னைய அரசாங்கம் வெளிநாடுகளிற்கு வழங்கிய நிலஙகளை சொத்துக்களை மீளப்பெறப்போவதாக அரசாங்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர் எனினும் அவர்கள் அதனையே செய்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.