கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து
srilanka
corona
shavendra silva
ship accident
tamil news
By S P Thas
கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கப்பலில் உள்ள இரசாயணங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பலுக்குள் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கப்பலின் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 டன் நிறைகளை கொண்டுள்ளதென அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்