நாடு முழுவதும் நாளை இரவு முதல் முழு நாள் பயணத் தடை -இராணுவத்தளபதி அறிவிப்பு
corona
lock down
shavendra silva
sri Lanka
By Kalaimathy
நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்