உழைப்பை வாங்கிக்கொண்டு ஏமாற்றும் கம்பனிகள்! வலிகள் நிறைந்த குரல்கள்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் தங்களுக்கு இன்னும் அந்த சம்பளம் கிடைக்கவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், தங்களுக்கு அந்த சம்பளத்தை தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் நாள் சம்பளத்தினால் கடும் பொருளாதார சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
அரசாங்கமானது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை நாள் சம்பளமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது கிடைக்கும் வருமானம் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உண்டு எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்