இந்தியாவின் தேசிய பாதுகாப்பு: இலங்கை எம்.பி வழங்கிய உறுதி!
இந்தியாவின் (India) தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை (Sri Lanka) தொடர்ந்தும் செயல்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எந்தவொரு நாடும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இலங்கை பொறுப்புள்ள வகையில் செயல்படுமென சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார்.
சீன (China) ஆராய்ச்சிக் கப்பலின் இலங்கைக்கான பயணம் தொடர்பில் அண்மையில் இந்தியா அதிக கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்ததாக அலி சப்ரி நினைவூட்டியுள்ளார்.
வெளிநாட்டு கப்பல்கள்
இந்த நிலையில், எதிர்காலத்தில் வெளிநாட்டு கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் வெளிப்படையான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மற்றொரு நாட்டின் அழுத்தங்கள் காரணமாக குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
உலகின் எந்தவொரு நாட்டுடனும் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் நெருங்கிய வர்த்தக நண்பராக தற்போது சீனா இருப்பதாகவும் இந்தியா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவை போல், இலங்கையும் ஏனைய நாடுகளுடன் சிறந்த உறவுகளை கொண்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | Colombo: On India- Sri Lanka relations, Sri Lanka Minister of Foreign Affairs Ali Sabry says, "We have an excellent relationship, which is at an all-time high. There is a multifaceted partnership between the two countries. Economically we are trying to engage with each… pic.twitter.com/aOWANba1gk
— ANI (@ANI) May 20, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |