தைவானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Taiwan
World
By Dilakshan
தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான டைடுங்கில் இன்று (24) பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.
இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சேதம்
எவ்வாறாயினும், குறித்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், 11.9 கிலோமீற்றர் (7.39 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி