மாணவர் அனுமதி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
By Sumithiran
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிபர்கள் நேர்முகத்தேர்வு நடத்தி
பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் அந்தந்த அதிபர்கள் நேர்முகத்தேர்வு நடத்தி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும்.
எனவே, இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சை அணுக வேண்டாம் என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்