மருத்துவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
Colombo
Ranil Wickremesinghe
By Sumithiran
மருத்துவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான பிரத்தியேக கொடுப்பனவில் அதிகரிப்பை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை அதிகரிக்க அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
35,000 ரூபாவில் இருந்து 70,000 ரூபாவாக
அதன்படி, இதுவரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட DAT கொடுப்பனவு 35,000 ரூபாவில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை
அதேபோல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்க அதிபர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்