இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!
மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றிகண்டுள்ளது.
பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனின் தூரநோக்கான சிந்தனையூடாகவே இந்த இயற்கை உர உற்பத்தியானது கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டுத் திறம்பட நடைபெற்று வந்தது.
வேலைத்திட்டடம்
இந்நிலையில், அந்த வேலைத்திட்டமானது தற்போது வெற்றிகண்டுள்ளது.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு விவசாயச் செயற்பாட்டிற்கு மூன்று இலட்சம் கிலோ இயற்கை உரமானது தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மானிப்பாய் பிரதேச சபை முன்வந்துள்ளது.
அதன் முதற்கட்டமாக, தற்போது 50,000 கிலோ எடையுடைய உரத்தினை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




