இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதுளை இனங்கள்
விவசாயத் துறையின் மேற்பார்வையின் கீழ் சோதிக்கப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாலி பிங்க்'( 'Mali Pink'') மற்றும் 'லங்கா ரெட்' ( Lanka Red)எனப் பெயரிடப்பட்ட இந்த மாதுளை வகைகள், அம்பலாந்தோட்டையில் உள்ள ருஹுணு தாவர பரிசோதனை நிலையத்தின் கீழ் சோதிக்கப்பட்டன.
விவசாயக் கொள்கை சபையின் விதிகளின்படி ஆராய்ச்சி
விவசாய துறையின் உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) எல். ஜி. ஐ. சமன்மாலி, விவசாய அமைச்சகம் மற்றும் விவசாயதுறையின் தேசிய விவசாயக் கொள்கை சபையின் விதிகளின்படி இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
இந்த மாதுளை வகைகளை ஹம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் பயிரிட முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இறக்குமதியாகும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும்
இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும் நாட்டில் பயிரிடுவதன் மூலம், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த மாதுளைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


