இலங்கையில் உள்ள செல்வந்தர்களிடம் முக்கிய வேண்டுகோள்! இராஜாங்க அமைச்சர் தகவல்
srilanka
covid19
corona
sudarshini fernandopulle
By S P Thas
கொவிட் நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ன செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுவாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்குமாறு செல்வந்தர்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்