பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பனமான இந்தியாவின் தற்கொலை படை ட்ரோன்கள்
இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ராடர்களையும் வானிலே தாக்கி அழித்த தற்கொலை படை ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட ‘‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ராடர்களையும் தாக்கி அழித்ததில் ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே ஆகிய இடங்களில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களையும் துல்லியமாக தாக்கி அழித்தன.
தற்கொலை படை ட்ரோன்கள்
ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தற்கொலை படை ட்ரோன்கள் எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே அழிப்பதுடன், எதிரி நாட்டின் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. அதனால் இந்திய பாதுகாப்பு படை முதல் முறையாக, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் பணியில் இந்த ட்ரோன்களை பயன்படுத்தின.
ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ் என அழைக்கப்படும் ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்கள் பெங்களூருவில் உள்ள ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. அந்த நிறுவனம் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாக்கியது.
இதன் சிறப்பம்சம்
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் போர்க்களத்தில் வானில் வட்டமிட்டு எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்து, அவற்றை வெடிபொருட்களால் அழிக்கும் திறன் கொண்டது.
ஒவ்வொரு ஸ்கை ஸ்ட்ரைக்கர் ட்ரோனும் 100 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது. 10 கிலோ வரை வெடி குண்டுகளை கொண்டு செல்லக்கூடியது. அதன் மின்சார உந்துவிசை, குறைந்தபட்ச ஒலி தடத்தை கண்டறிந்து, குறைந்த உயரத்தில் கூட பயணித்து தாக்ககூடியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
