தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள்
மண்முனை பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) அமைப்பாளருமான ஜனாப் A.A. மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.
மேற்படி வைபவம் ஜனாப் A.மதீன் தலைமையில் நேற்றைய தினம் (22/03/2025) காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை பற்றில் அரசாங்கத்தை பலப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த இணைவு நடைபெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஜனாப்.எம். அப்துல்லா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம் என் முபீன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் எம் ஏ. நசீர், காத்தான்குடி நகர சபை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களான பொறியியலாளர் பலுலுல் ஹக். எம். நஜிம் மற்றும் எம் எம். றம்ஸி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் எதிர்காலத்தில் மண்முனை பற்று பிரதேசம் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்