சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுரேஷ் சலே : சிஐடி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

CID - Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Suresh Salley
By Sathangani Jun 16, 2026 05:13 AM GMT
Report

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினமும் (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

திருமலையில் விபத்து : பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

திருமலையில் விபத்து : பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

 தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம்

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுரேஷ் சலே : சிஐடி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை | Suresh Saleh Tortured Investigation Cid Officers

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்

சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்கு அருகில் இருந்த ஏனைய கைதிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுரேஷ் சலே : சிஐடி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை | Suresh Saleh Tortured Investigation Cid Officers

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலும் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சில பகுதிகளுக்கு 19 மணி நேர நீர் வெட்டு

நாட்டில் சில பகுதிகளுக்கு 19 மணி நேர நீர் வெட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025