உலகின் வித்தியாசமான தேர்தல் முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா!
உலகம் முழுவதும் தேர்தல் என்பது மிக முக்கியமான விடயமாக கருதப்படுகிறது, ஒரு நாட்டினை ஆள்வதற்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த பணியாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது, அந்த வகையில்ஆரம்பகால மன்னர் ஆட்சி முதல் இந்தக் கால மக்கள் ஆட்சி வரை உலகம் முழுவதும் உள்ள தேர்தல்கள் பல கால கட்டத்தை கடந்து வந்துள்ளது, வாக்களிப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருந்தால் நாடுகளுக்கிடையில் இருக்கும் தேர்தல் குறித்து சில சுவாரசியமான விடயங்கள் உண்டு அவை என்ன என்று பார்ப்போம்,
உலகம் முழுவதும் தேர்தலில் வாக்களிக்க சில விநோதமான வாக்களிக்கும் முறைகளை பின்பற்றி உள்ளனர், பண்டைய கிரேக்க முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் வாக்காளர்கள் வாக்களிக்க கருப்பு மற்றும் வெள்ளை கூழாங்கற்களைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
களிமண் பந்துகளை
அதேபோல் ரோமானியர்கள் கூழாங்கற்களுக்கு பதிலாக களிமண் பந்துகளை வாக்களிக்கவும், தலைகவசங்களை வாக்குப் பெட்டிகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர், பின்னர் அமெரிக்க காலனித்துவம் இருந்த காலத்தில் ஆரம்ப நாட்களில் வாக்காளர்கள் வண்ணமயமான பீன்ஸ் அல்லது சோளக்கதிர்களை வாக்களிக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.
தென்மேற்கு ஆபிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் வாக்காளர்கள் கைகளில் பச்சை வண்ணம் பூசி அதை வைத்து வாக்களித்துள்ளனர்.
இதுவே ஈராக்கியர்களை எடுத்துக் கொண்டால் ஊதா நிற மை ஜாடியில் விரலை நனைத்து தங்கள் ஆதரவை காட்டி உள்ளனர்.
காம்பியன் வாக்காளர்கள் எப்பொழுதுமே வித்தியாசமானவர்கள், அவர்கள் கண்ணாடிப் பளிங்கு கற்களை வண்ண உருளைகளில் போட்டு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர், பளிங்குக் கற்கள் ஒன்றன் மேல் ஒன்று விழும் ஒலியை வைத்து பெரும் ஆதரவை கணித்தனர்.
பொதுவாக அமெரிக்காவில் தேர்தல்கள் நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமைகளில் தான் நடைபெறும். ஏனெனில் அமெரிக்காவில் விவசாயிகள் அதிகமாக இருந்த போது இது நடைமுறையில் இருந்தது, ஏனென்றால் அவர்களின் சாகுபடி மற்றும் அறுவடை நவம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும், இதனால் விவசாயிகள் வேலையில் இருந்து விலகி வாக்களிக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதற்காகவாகும்.
அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கிரீஸ் உட்பட பல நாடுகளில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் குறைவாக வேலை செய்யும் போது தேர்தல் நடத்தப்படுகிறது, எல்லா மக்களும் தேர்தலில் கலந்து கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித் : சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்!
காடுகளில் வசிக்கும் மக்களுக்கும்
நெதர்லாந்து போன்ற நாடுகளில் புதன் கிழமைகளில் வாக்களிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைந்துள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு புதன்கிழமைகளில் அரை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் முதன் முறையாக அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட போது 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வெள்ளையர்களில் சொத்துக்கள் உடைய ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற சட்டம் இருந்தது, அதுவே 1971 ஆம் ஆண்டு வரை வாக்களிக்கும் வயது 21 ஆகவே இருந்தது, அதன் பிறகு தான் வாக்களிக்க 18 வயதை தீர்மானித்தார்கள், அதன் பிறகு தான் 18 வயதை நிரம்பியவர்கள் இராணுவத்தில் சேரலாம், திருமணம் செய்து கொள்ளலாம், வரிப்பணம் செலுத்தலாம் போன்ற நடைமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இதன் பிறகு பல நாடுகளில் 18 வயதை நிரம்பியவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது, மால்டா மற்றும் அவுஸ்திரியாவில் 16 வயதை அடைந்தவர்கள் கூட வாக்களிக்க முடியும், உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க ஜெர்மானியர்கள் 16 வயதை எட்டி இருந்தால் போதும், அதிபர் தேர்தலுக்கான நேரத்தில் 18 அல்லது 17 வயது இளைஞர்களை முதன்மைத் தேர்தலில் வாக்களிக்க மூன்றில் ஒரு பங்கு மாநிலங்கள் அனுமதிக்கின்றன என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
வாக்காளர்களை நீண்ட தூரத்திற்கு அழைத்துச் சென்றும் வாக்களிக்க வைத்துள்ள தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன வாக்குப் பதிவு இயந்திரங்களை யானையின் முதுகில் வைத்து பாலங்களை கடப்பது, காடுகள், பனிப்பாறைகள் மற்றும் பாலைவனங்கள் வழியாக கடந்து செல்வது போன்ற விடயங்களைச் செய்து வந்துள்ளனர், இதன் மூலம் காடுகளில் வசிக்கும் மக்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு தரப்பட்டது.
காடுகளில் வாழும் மிருகங்களும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க சில நடைமுறையைப் பின்பற்றுகின்றன, குறிப்பாக சிம்பன்சி குரங்குகள் தலைவராக வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வதை அடிப்படையாகக் கொண்டு ஆதரவைப் பெற்று தெரிவு செய்யப்படுகிறது.
இதுவே மான் கூட்டங்களில் ஒரு வயலில் இருந்து 60% க்கும் அதிகமான சிவப்பு மான் கூட்டங்கள் எழுந்து நின்று ஆதரவை காட்டுகின்றன, இதுவே ஆபிரிக்க காட்டு நாய்கள் தும்மலின் மூலம் ஆதரவை வெளியிடுகின்றன, இதுவே பபூன் பூச்சிகளை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு திசைகளில் புறப்படும் போது எந்த தலைவரை பின்பற்ற வேண்டும் என்பதை உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கின்றன.
இதுவே தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தேர்ந்தெடுத்த மகரந்தத் தளங்களுக்கு மற்ற தேனீக்களை அழைத்துச் செல்ல நடனமாடும் முறையை பின்பற்றுகின்றன.
எனவே நிலையான ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது மனிதர்களில் மட்டுமல்ல விலங்குகளிடம் கூட இருக்கிறது, இப்படி மன்னர் ஆட்சி முதல் இன்று இருக்கும் மக்கள் ஆட்சி வரை மக்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்க வித்தியாசமான முறைகளை பின்பற்றி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.