போதை மாத்திரைகளுடன் மாதம்பையில் சந்தேகநபர் ஒருவர் கைது
Puttalam
Drugs
Arrest
By Abi
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மாதம்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் - மாதம்பை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கலஹிட்டியாவ பகுதியில் நேற்று (21.04.2026) மாலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகள்
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்றினை வழிமறித்து சோதனையிட்ட போதே, அதில் கடத்தி வரப்பட்ட 216,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாதம்பை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி