கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Bandaranaike International Airport 
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபரிடமிருந்து 7,600 சட்டவிரோத சிகரெட்டுகள் (28 கார்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        