சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த பெண் சந்தேகநபர் ஒருவர் கல்முனை தலைமையக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (23.11.2025) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கல்முனை தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
குறித்த சந்தேகநபர் மற்றும் மீட்கப்பட்ட மதுபான வகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

66 வயதுடைய பெண் சந்தேகநபரை இதன்போது கைது செய்த காவல்துறையினர் ஒரு தொகை பணம் மற்றும் பல்வேறு மதுபான வகைகளை பறிமுதல் செய்தனர்.
இவ்விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
