கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது சிறந்தது
Corona
Sri lanka
Suthath samaraveera
By Shalini
கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது சிறந்தது.
தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
COVID க்கு யாராவது பாதிப்பட்டு இருந்தால், வைரஸ் ஏற்கனவே அவர்களின் உடலில் நுழைந்திருப்பதால் தடுப்பூசியை பெறுவதில் எந்த பயனும் இல்லை என்று அவர் கூறினார்.
"எனவே, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு நாங்கள் தடுப்பூசி வழங்குவதில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்