சுவிஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு!
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் அதிகபட்சமாகப் பத்து மில்லியனாக (1 கோடி) கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்த முக்கிய பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் நடைபெறுகிறது.
தற்போதைய மக்கள் தொகை 9.1 மில்லியனாக உள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி இத்திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
பணியாளர் பற்றாக்குறை
இருப்பினும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் முறிந்து சுவிட்சர்லாந்து உலகளவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கமும் தொழில்துறையினரும் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி இத்திட்டத்திற்கு எதிராக 52 வீதம் பேரும் ஆதரவாக 45 வீதம் பேரும் உள்ளதால் வாக்கெடுப்பின் முடிவு மிக நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |