பதுளையை உலுக்கிய சம்பவம் : நடு வீதியில் கொடூரமாக வெட்டப்பட்ட நபர்
பதுளையில் (Badulla) இருவருக்கிடையில் வாள் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20) பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர்களுக்கு இடையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது தம்பி மீது நபரொருவர் சுமார் பத்து நிமிடங்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளார்.
யாராவது அருகில் வந்தால் அவர்களையும் வெட்டுவேன் என தாக்கிய நபர் எச்சரித்த நிலையில், அருகில் எவரும் செல்லவில்லை.
விசாரணை
இச்சந்தர்ப்பத்தில் பதுளை காவல்துறையின் ஓட்டுநர் மற்றும் சார்ஜென்ட் நிலந்த என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் ஒருவர் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இதையடுத்து, வெட்டு காயங்களுக்கு உள்ளான நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் மற்றும் குற்ற தடவியல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
