அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது நாட்டில் அரசாங்கத்திற்கு மேலாக ஒரு அரசு செயற்படுகிறது. அத்துடன் குற்றங்களுக்கான ஒரு அரசும் செயற்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர்
அந்த குற்றங்களுக்கான அரசை இல்லாமல் செய்ய வேண்டும். இந்தநிலையில் அதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் ஒரு அங்கமே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டுக்கு எதிராகக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ரணிலின் நண்பரான சிங்கப்பூரில் இருக்கும் அர்ஜூன மகேந்திரனும் கைது செய்து அழைத்து வரப்படுவார் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

