தலிபான்கள் இரக்கமற்றவர்கள் - அமெரிக்க இராணுவ அதிகாரி வெளியிட்ட தகவல்
america
army
statement
taliban
By Vanan
தலிபான்கள் இரக்கமற்ற குழுவென விமர்சித்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் மார்க் மில்லி, அவர்களின் செயற்பாடுகளில் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் ஐ.எஸ் - கே பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை தலிபான்களுடன் இணைந்து முன்னெடுக்க முடியும் என ஜெனரல் மார்க் மில்லி குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிகாத் ஆயுத தாரிகளின் மிகவும் தீவிரமான மற்றும் வன்முறை மிக்க குழுவாக ஐ.எஸ் – கே ஆயுத தாரிகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.