தமிழீழ வைப்பகத்திலிருந்து கையகப்படுத்தப்பட்ட பெருந்தொகை தங்கம்! தமிழ் எம்.பி ஆவேசம்
யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை கைப்பற்றி கொண்டு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன அழிப்பு
மேலும், எங்களது இனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இன அழிப்பை மேற்கொண்டது, இதற்கு எதிராக எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுத போராட்டம் ஒன்றை நடத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு நடைமுறை அரசாங்கத்தை வடக்கு - கிழக்கில் நிறுவியிருந்தார்.
நாங்களும் யுத்தம் செய்தோம், நீங்களும் யுத்தம் செய்தீர்கள். ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்து விட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |